பத்தாம் திருமுறை
1237 பதிகங்கள், 3000 பாடல்கள்
முதல் தந்திரம் - 4. உபதேசம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30


பதிக வரலாறு :

``சிந்தை செய்து ஆகமம் செப்பலுற்றேன்`` (தி.10 பா.12) என்றவாறே, சிவாகமப் பொருள்கள் அனைத்தையும் உள்ளத்தில் திரட்டிக் கொண்டு அவற்றைத் தமிழால் வெளியிடத் தொடங்கிய நாயனார், முதற்கண் அவ் ஆகமநெறிக்கண் கொள்ளப்படும் இறைவனாகிய சிவபெரு மானது பெருமையையும், பின்னர் அவனது நூலாகிய வேத சிவாகமங்களின் சிறப்புகளையும் கூறிப் பின்னர் அவ்வாகமப் பொருள்களை உபதேசமாக முப்பது திருமந்திரங்களால் தொகுத்தருளிச் செய்கின்றார். `திரிமூர்த்திகளின் சேட்டகனிட்ட முறை` என்பது, ஐயமறுத்தல் வேண்டி இடைப்புக்கது என்க. ``இறைவனை யும் இறைவனால் இயம்பும் நூலும்`` என்ற சிவஞான சித்தி (பரபக்கம். 10) யால் இம்முறை அறியப்படுதல் காண்க. உபதேசமாவது விரிந்த பொருளை ஒரு மொழியால் தொகுத்துணர்த்துவதாதலின், அதனோடொத்த இத் தொகைப்பொருளை `உபதேசம்` என்று அருளினார். இங்ஙனம் அருளிச் செய்கின்றவர், அப்பொருளை நூன்முறையாற் கூறாது, அநுபவ முறையானே கூறுகின்றார். சிவாகமப் பொருள்கள் நூல்களானும், பொருந்துமாற்றானுமன்றி, அநுபவத்தாலும் மெய்ம்மையாய் விளங்கும் என்றற்கு. ``மூலன் உரைசெய்த முப்பதுபதேசம்`` (தி.10 ) எனப் பின்னுள்ளோர் குறித்தது இதனையே. இம்முப்பது திருமந்திரங்களும் அந்தாதியாய்த் தொடர்ந்து மண்டலித்து முடிந்து ஒரு தனிச் சிறப்புப் பகுதியாய் நிற்றல் காணத்தக்கது.

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.